வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சில்லறை
மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கி நகை, பணம் பறிப்பு
12-Sep-2025
கோட்டக்குப்பம்; ஒர்க் ஷாப் உரிமையாளரை கத்தியால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோட்டக்குப்பம் புது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். மெக்கானிக். இவர் இருசக்கர வாகன ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த மே மாதம் 2ம் தேதி கோட்டக்குப்பம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மதன், 22; என்பவர் வந்துள்ளார். கடையில் வேலை செய்த நபரிடம், கடை உரிமையாளரான அப்துல் ரஹ்மான் மொபைல் எண்ணை கேட்டுள்ளார். அவர் தர மறுத்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரஹ்மானை நேரிங் சந்தித்த மதன், கடையில் மொபைல் போன் எண் தர மறுத்தது குறித்து கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மதன், அப்துல் ரஹ்மானை கத்தியால் வெட்டி விட்டு தலைமறைவானார். அப்துல் ரஹ்மான் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மதனை தேடி வந்தனர். இதற்கிடையே சம்பவத்திற்கு பிறகு சென்னையில் தங்கி வேலை செய்து செய்து வந்த மதன், அங்கு தகராறு செய்து சிறை சென்று சமீபத்தில் கோட்டக்குப்பம் வந்து பதுங்கி இருந்தவரை நேற்று கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
சில்லறை
12-Sep-2025