2 வீடுகளில் திருடிய வாலிபர் கைது
மரக்காணம் : பிரம்மதேசம் அருகே 2 வீடுகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மன்னார்சாமி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அதில் அவர், டி.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகன் அருண்குமார், 28; என்பதும், கடந்த 3ம் தேதி டி.நல்லாளம் பகுதியில் ஆறுமுகம் என்பவது வீட்டில் வீட்டில் 2 சவரன் நகை, ஏப்ரல் 26ம் தேதி கீழ்சிவிரி கிராமத்தில் மோகன்தாஸ், 70; என்பவர் வீட்டில் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 250 கிராம் வெள்ளி நகைகளை திருடியது தெரியவந்தது.உடன், அருண்குமாரை போலீசார் கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.