உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மொபைல் கடை மேலாளரை மிரட்டிய வாலிபர் கைது 

மொபைல் கடை மேலாளரை மிரட்டிய வாலிபர் கைது 

விழுப்புரம்: விழுப்புரத்தில் மொபைல் கடை மேலாளரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலம், நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் சண்முகம், 28; இவர், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மொபைல் கடை மேலாளர். கடந்த 11ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த வேலு மகன் தேவா ,22; என்பவர், மொபைபோனை பழுதுநீக்க கொடுத்தார். மொபைல்போன் பழுதுநீக்கி கொடுக்கப்பட்டது.மொபைல்போனை வாங்கி சென்ற தேவா, தனது மொபைல்போன் மீண்டும் பழுதாகி விட்டது என நேற்று முன்தினம் சண்முகத்திடம் அளித்தார். இதனை சரிசெய்ய மறுத்த சண்முகத்தை, தேவா திட்டி மிரட்டினார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை