மேலும் செய்திகள்
அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி
28-Aug-2025
விழுப்புரம்: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி, வைஷ்ணவி நகரை சேர்ந்தவர் ராஜாராமன் மகன் மோகன்ராஜ்,38; இவர், விழுப்புரம் அருகே கோலியனுாரில் கணினி சேவை மையம் வைத்துள்ளார். இதையொட்டி விழுப்புரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். கடந்த, 15ம் தேதி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வருத்தத்தில் தனது அறையில் விஷம் அருந்தினார். அங்கிருந்த சிலர் அவரை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Aug-2025