உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அனைத்து நகராட்சியையும் காங்., கைப்பற்றும் :மாணிக்கம் தாகூர் எம்.பி., உறுதி

அனைத்து நகராட்சியையும் காங்., கைப்பற்றும் :மாணிக்கம் தாகூர் எம்.பி., உறுதி

விருதுநகர் : ''மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தவிர்த்து, அனைத்து நகராட்சிகளையும் காங்., கைப்பற்றும்,'' என, மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார். விருதுநகரில் காங்., தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: தேர்தலில் சீட் கிடைக்க ராசி வேண்டும், அதேபோல் வெற்றி பெறவும் ராசி வேண்டும். இது இரண்டுமே விருதுநகரில் காங்., சார்பில் போட்டியிடும் நகராட்சி தலைவர் வேட்பாளர் கார்த்திகாவிடம் உள்ளது. காங்., கூட்டணி இல்லாமல் 1989, 95 களில் விருதுநகர் நகராட்சியை கைப்பற்றியுள்ளது. அதேபோல் காங்., கட்சி தற்போது கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனித்து போட்டி யிடுகிறது. நிச்சயம் வெற்றி பெறும். காமராசருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருதுநகர் மக்கள் காங்., கட்சியினருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். காங்., கட்சியை சேர்ந்தவர்கள், ஓட்டு போட்டாலே வெற்றி பெற்று விடுவார்கள். தமிழகத்திலே விருதுநகர் மாவட்டத்தில் தான் இளைஞர் காங்., வேட்பாளர்களுக்கு அதிக 'சீட்' கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தவிர மற்ற அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளை காங்., நிச்சயம் கைப்பற்றும் ,என்றார். விருதுநகர் நகராட்சி காங்., வேட்பாளர் கார்த்திகா, நகர ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், மாவட்ட தலைவர் ஜி. கணேசன், தமிழக மாணவர் காங்., முன்னாள் தலைவர் நவீன், நகர் தலைவர் கார்த்திகேயன் மற்றும் இளைஞர் காங்., நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர் வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ