உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம் அதிகரிக்காததால் நெசவாளர்கள் தவிப்பு

முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம் அதிகரிக்காததால் நெசவாளர்கள் தவிப்பு

விருதுநகர் : கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.400ம், குடும்ப ஓய்வூதியம் ரூ.550 ஐ உயர்த்தாததால், நெசவாளர்கள் தவிக்கின்றனர். கைத்தறி துணி நூல் துறை சார்பில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், கடலூர், கரூர், சேலம், தர்மபுரி,நாமக்கல், கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1,232 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் 18 சரகங்களாக செயல்படுகின்றன. இதில் 3 லட்சம் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

நெசவாளர்கள் அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை போன்றவைகளை நெசவு செய்கின்றனர். நாளொன்றுக்கு குறைந்த பட்சமாக ரூ. 100 முதல் 200 ரூபாய் வரை மட்டுமே கூலி கிடைக்கிறது. தினமும் 18 மணி நேரம் உழைத்தாலும் சம்பளம் அதிகரிக்க வாய்ப்பில்லை. 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு முதியோர் உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு ரூ. 400 ம், நெசவாளர் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு மாதம் ஓய்வூதியமாக ரூ. 550ம் வழங்கப்படுகிறது. வருவாய்துறையில் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 வரை உயர்த்தி அரசு வழங்கியுள்ளது.காலம் எல்லாம் வறுமையில் வாடும் நெசவாளர்களுக்கு வழங்கும் முதியோர் உதவித்தொகை, குடும்ப ஓய்வூதிம் பற்றாக்குறையால் பல குடும்பங்கள் தவித்து வருகின்றன. விலை வாசி உயர்வை அரசு கருத்தில் கொண்டு நெசவாளர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம், உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

கைத்தறி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''அரசு வருவாய்துறையில் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது போல், நெசவாளர்களுக்கு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கைத்தறி தனித்துறை என்பதால் நிதி செலவினம் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ