மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள் விருதுநகர்
12 hour(s) ago
கருப்பு சேலை அணிந்து ஆர்ப்பாட்டம்
12 hour(s) ago
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு
12 hour(s) ago
கோயில்களில் சிவராத்திரி
12 hour(s) ago
ராஜபாளையம் : ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் இடிக்கும் பணி, பாதியில் நிற்பதால் இதன் பணிகள் தொய்வின்றி நடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.ராஜபாளையம் தென்காசி ரோட்டில் பழைய கட்டடத்தில் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டது. பராமரிப்பு இல்லாமல் சிறுமழை பெய்தாலே ஸ்டேஷனில் தண்ணீர் வரும் நிலை இருந்தது. இதை தரைமட்டமாக இடித்து 40 லட்சம் ரூபாயில் நவீன வசதிகளுடன் ஸ்டேஷன் கட்ட திட்டமிடப்பட்டது. சட்டசபை தேர்தலுக்கு முன் அவசரமாக ஸ்டேஷன் இடிக்கப்பட்டு, இதன் ஸ்டேஷன் தற்காலிகமாக மகளிர் ஸ்டேஷனில் செயல்பட்டு வருகிறது. அங்கு இடவசதி இல்லாததால், மரத்தடி, வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் எஸ்.ஐ.,க்கள் உட்கார்ந்து விசாரிக்கும் நிலை உள்ளது.அவசரமாக இடிக்கப்பட்ட ஸ்டேஷன் பணிகளும் இரண்டு மாதத்திற்கு முன் பாதியில் நிற்கிறது. மெயின்ரோடு அருகே இடிந்த நிலையில் இருள் சூழ்ந்து உள்ளதால், இரவில் திறந்தவெளி கழிவறையாக மாறிவருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஸ்டேஷன் பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago