மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே மின் கம்பிகளை உரசும் மர கிளை மற்றும் கொடிகளால் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர்.ராஜபாளையம் தென்றல் நகர் ரோடு மலையை ஒட்டிய பகுதியான செண்பக தோப்பு ரோடு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் அமைந்துள்ளது. தென்னை, மா, பலா, எலுமிச்சை, வாழை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளின் இணைப்பு ரோடான இப்பகுதியில் மின்சார இணைப்புக்கான உயரழுத்த மின் கம்பி செல்கிறது.இப்பகுதியில் கிணற்று நீர் பாசனம், ஆழ்துளை குழாய் போர்வெல்களை நம்பியே உள்ளது. இதற்கான மின்கம்பிகள் செல்லும் செண்பகத் தோப்பு ரோடு, அணைத்தலை ஆற்று பகுதி அதற்கடுத்த விவசாய பகுதிகளுக்கான மின் கம்பங்களில் தொடர் பராமரிப்பு இல்லாமல் மரக்கிளைகள், கொடிகள் படர்ந்து வருவதுடன் லேசான காற்று வீசும் போதும் இணைப்பு துண்டாகி இணைப்பு வழங்கும் வரை நீர்ப்பாசனத்திற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.இதனால் மின்வாரியத்தினர் பழுதான மின்இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்தால் விவசாயிகள் பயிர்களுக்கு பிரச்சனையின்றி தண்ணீர் பாய்ச்சுவர்.
12 hour(s) ago
12 hour(s) ago