உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்--

காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்--

ராஜபாளையம் : ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பூரசம்பாறை கருப்பசுவாமி கோயில் அருகே உள்ள தென்னந்தோப்பில் காட்டு யானை புகுந்ததால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே புரசம்பாறை கருப்பசுவாமி கோயில் உள்ளது. இப்பகுதியில் மா, தென்னை, வாழை, கரும்பு, பலா உள்ளிட்ட சாகுபடி நுாற்றுக்கணக்கான ஏக்கர் நடைபெற்று வருகிறது.இப்பகுதியில் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜேஷ், கல்யாணி ராஜா, பாஸ்கர் ராஜா, சுப்பிரமணிய ராஜா, ரமணா ஆகியோர் தோப்புகளில் மரங்களை பராமரித்து வருகின்றனர். மழையில் இருந்து தோப்பில் புகுந்த காட்டு யானைகள் தென்னங்கன்றுகளின் குருத்துகளை ஒடித்து சேதப்படுத்தி உள்ளது.இது குறித்து விவசாயி ராஜேஷ்: யானை கூட்டம் வேலியை சாய்த்து இரண்டு முதல் நான்கு ஆண்டு வரை பராமரித்து வளர்த்த 80 தென்னங்கன்றுகளை குருத்துகளையும் சில வாழை மரங்களையும் முற்றிலும் சேதப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு கன்றுகளும் நடவு, உரம், உழவு, பாசனம், காவலாளி, பராமரிப்பு என சுமார் 4000 வரை செலவிட்டு உள்ளோம். வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !