உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / --துார்வாராத கால்வாய்; சீரமைக்கப்படாத ரோடு

--துார்வாராத கால்வாய்; சீரமைக்கப்படாத ரோடு

ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சி 35 வது வார்டில் பல வருடங்களாக துார்வாரப்படாத ஓடை, செப்பனிடப்படாத தெரு, நாய்கள் தொல்லை என அப்பகுதி மக்கள் பல்வேறு சிக்கலை சந்தித்து வருகின்றனர்.ஜவகர் மைதானம், மாதாங்கோயில், மதுரை ராஜா கடை, பண்டிட் சுப்பராஜா, சிதம்பரனார் தெருக்களை உள்ளடக்கியது இவ்வார்டு. சங்கரன்கோயில் சாலை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதி குடியிருப்புகள் இடையே பிரதான ஓடையில் சாக்கடை தேங்குவதால் பாதிப்பு ஏற்படுகிறது. குடியிருப்புகள் இடையே பராமரிப்பற்று திரியும் நாய்கள் பகல் நேரங்களிலும் பெண்கள் முதியோர் குழந்தைகளை விரட்டுவதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.ஓடைகளில் தேங்கும் கழிவுகள் கொசு தொல்லைக்கு காரணமாக உள்ளதுடன் துர்நாற்றப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. புதிதாக ரோடு போடுவதற்கு என உயர்த்தியுள்ள பேவர் பிளாக் ரோட்டினால் மழையின் போது சாக்கடை கழிவுகள் வீடுகளுக்குள் புகுகின்றது. பாதாள சாக்கடை குழாய்கள் வாறுகால் தரைப் பாலம் அடியில் செல்லும்போது கழிவுகளுக்கு தடை ஏற்படுத்தி வருகிறது. பதினைந்திற்கும் மேற்பட்ட இணைப்பு தரைப்பாலங்கள் பணிகள் முடியாததால் கழிவுகள் தேங்கி பாதிப்பு ஏற்படுத்துகிறது. நீண்ட கால சிக்கலுக்கு தீர்வு காண குடியிருப்பு வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை