மேலும் செய்திகள்
அண்ணாமலை படம் எரிப்பு; புதுச்சேரியில் பரபரப்பு
28-Aug-2024
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.காந்தி நகர் நகராட்சி மினி பஸ் ஸ்டாண்ட் அருகில் நகர அதி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பஸ் ஸ்டாண்ட் முன்பு அண்ணாமலையை கண்டித்தும், கைது செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் செய்து அண்ணாமலை உருவப்படத்தை அவமதித்தனர். பாதுகாப்பிற்காக இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி, சங்கரேஸ்வரி, எஸ்.ஐ., க்கள் முத்துராஜ், முத்துக் குமார் மற்றும் போலீசார் இருந்தனர். அவமரியாதை செய்ததை தடுக்காமல் நின்ற போலீசாரை டி.எஸ்.பி., காயத்ரி கடிந்து கொண்டார்.
28-Aug-2024