உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

ராஜபாளையம் : ராஜபாளையம் மூத்தோர் நல சங்கம், அப்பல்லோ மருத்துவமனை, ஈக்விடாஸ் வங்கி இணைந்து இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.டாக்டர் கணேசன் தலைமை வகித்து இருதய நலம் மற்றும் பரிசோதனைகளின் முக்கியத்துவம் பற்றி பேசினார். மூத்தோர் நலச்சங்க தலைவர் பெத்துராஜ் வரவேற்றார். அப்போலோ மருத்துவர் கலையரசி மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகள் பற்றி விளக்கினார்.லயன் முன்னாள் மாவட்ட ஆளுநர் பிரகாஷ் குத்துவிளக்கேற்றி துவக்கினார். 195 நபர்களுக்கு இருதயம், கண் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டது.ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், முத்துராமலிங்கம் சுப்பிரமணியன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி