| ADDED : நவ 22, 2025 05:04 AM
ராஜபாளையம்:மாவட்ட காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மாரிமுத்து வரவேற்றார். டி.எஸ்.பி., பஸினா பீவி, இன்ஸ்பெக்டர்கள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிதல், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல், மிதமான வேகத்தில் செல்லுதல், போதிய இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குமரகுரு நன்றி கூறினார்.