மேலும் செய்திகள்
கருப்பசாமி கோவிலில் விளக்கு பூஜை
01-Mar-2025
சிவகாசி: சிவகாசியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பட்டாசு தொழிலாளி கருப்பசாமியை 30, வெட்டிக் கொலை செய்த நான்கு பேரை கிழக்கு போலீசார் கைது செய்தனர். சிவகாசி சாத்துார் ரோடு சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி கருப்பசாமி . இவரது மனைவி கற்பகம் 22. அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். கற்பகத்திற்கும் முருகன் காலனியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி மாரிமுத்துக்கும் 30, இரண்டு ஆண்டாக தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து தெரிந்த கருப்பசாமி, மாரிமுத்துவை சத்தம் போட்டு உள்ளார். நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் கருப்பசாமி சிவகாமிபுரம் காலனியில் நின்ற போது அங்கு வந்த மாரிமுத்து, முருகன் காலனியைச் சேர்ந்த கணேசன் 40, குமார் 35, ஜோசப் 27 ஆகியோர் வெட்டி கொலை செய்தனர். நான்கு பேரையும் கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
01-Mar-2025