உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கொசுப்புழு ஆய்வு ரூ.5 ஆயிரம் அபராதம்

கொசுப்புழு ஆய்வு ரூ.5 ஆயிரம் அபராதம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதும் தீவிர கொசு ஒழிப்புப் பணி நடந்து வருகின்றது. இக்குழுவினர் திருத்தங்கல் சாமிக்காளை காம்பவுண்ட் பகுதி, முருகன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று கொசுப்புழு இருக்கிறதா என ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கொசுப் புழு கண்டறியப்பட்டு வீட்டு உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார அலுவலர்கள் சுரேஷ், பகவதி பெருமாள், சுகாதார ஆய்வாளர்கள் சித்திக், முத்துப்பாண்டி பணியினை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை