உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சுந்தரராஜபுரத்தில் 50 லி சாராய ஊறல் பறிமுதல்

சுந்தரராஜபுரத்தில் 50 லி சாராய ஊறல் பறிமுதல்

சேத்துார்: சேத்துார் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மாடசாமியை, 65 மதுவிலக்கு போலீசார் கைது செய்து 50 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.சேத்துார் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எஸ்.ஆர் தோட்ட தோப்பு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கணபதி சுந்தர நாச்சியார் புரத்தை சேர்ந்த மாடசாமி 65, என்பவரை ஸ்ரீவில்லிபுத்துர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து தோட்டத்தில் இருந்த 50 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் உள்ள தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய புகாரில் மாடசாமியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ