நரிக்குடி மானுாரில் நாய் கடித்து 8 பேர் காயம்
நரிக்குடி : நரிக்குடி மானூரில் வெறிநாய் கடித்து 8க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் வீதியில் நடமாடிய 8க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறியது. காயமடைந்தவர்கள் திருச்சுழி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து, மானூர் உள்ளிட்ட பகுதிகளில் இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் அதிக அளவில் ஊருக்குள் நாய்கள் நடமாட்டம் உள்ளன. போதிய உணவு கிடைக்காமல் வெறி பிடித்து ஆட்களை கடிக்கின்றன. மேலும் பலரை கடிக்கும் முன் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.