உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மரங்கள் நிறைந்த பசுமையான சூழலில் போலீஸ் குடியிருப்பு

மரங்கள் நிறைந்த பசுமையான சூழலில் போலீஸ் குடியிருப்பு

மாசுக்கள் அதிகரித்து வரும் இன்றைய அறிவியல் உலகில் மரங்கள் நிறைந்த குடியிருப்பு பகுதிகள் மிகவும் அவசியம் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் குடியிருப்பு.அதிகரித்து வரும் புவிவெப்பநிலையும், மாசுக்களும் நாகரீகம் என்ற பெயரில் எங்கு பார்த்தாலும் மக்காத குப்பைகளும் எதிர்கால மனித சமுதாயத்திற்கு ஒரு பெரும் சவாலாக விளங்குகிறது.நம் முன்னோர்கள் எதிர்கால நலன் கருதி நமக்காக நட்டு வளர்த்த மரங்கள் எல்லாம், போக்குவரத்து வளர்ச்சி என்ற பெயரில் இன்று அழிக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஈடாக போதிய அளவிற்கு மரக்கன்றுகள் நடப்படவில்லை. இதனால் புவியில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.மரங்கள் அதிகளவில் இருந்தால் மட்டுமே நிழல் கிடைக்கும், மழை கிடைக்கும், சுத்தமான காற்று கிடைக்கும், புவியின் வெப்பநிலை குறைந்து நாம் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கிடைக்கும்.அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகள் வளர்ந்து காணப்படுகிறது அதில் ஒரு முன்னுதாரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் குடியிருப்பு பகுதி திகழ்கிறது.இங்குள்ள தாலுகா போலீஸ் ஸ்டேஷன் முன்பு, 30 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மரக்கன்றுகள் எல்லாம் வளர்ந்து மரங்களாகி பசுமை சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதனை பின்பற்றி தற்போது கட்டப்பட்டுள்ள புதிய போலீஸ் குடியிருப்பில், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மரக்கன்றுகள் வளர்ந்து பசுமையுடன் காணப்படுகிறது.மரங்கள் நிறைந்த குடியிருப்புகளை உருவாக்கினால் மட்டுமே ஸ்ரீவில்லிபுத்தூர் பசுமை நகரமாக மட்டுமில்லாமல் மாசில்லா நகமாகவும் உருவாகும். இதற்கு ஒவ்வொரு தனிநபர் முதல் பொதுநல அமைப்புகள் வரை பாடுபடுவது அவசியம்.தற்போதைய வாழ்க்கை சூழலில் நாம் அதிகளவில் மக்காத குப்பைகளை பயன்படுத்துகிறோம். இதனால் மண் மாசு அடைகிறது. மரங்கள் பட்டு வருகிறது. பசுமை தன்மை குறைகிறது. மக்காத குப்பைகளை பயன்படுத்துவதை தவிர்த்தாலே மரக்கன்றுகள் பசுமை சூழ்நிலையில் வளரும். ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் அதிகளவில் மரக்கன்றுகள் வளர்த்து பசுமை சூழலை ஏற்படுத்துவோம்.- -பாலமுருகன், தலைவர், கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகரித்து வரும் மக்காத குப்பை எதிர்கால மனித சமுதாயத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. அதிலும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் மண்ணை பாதிப்படைய செய்கிறது. மண்ணைக் காப்பது நம் ஒவ்வொருவரது கடமையாகும். இதற்கு மக்காத குப்பைகள் பயன்படுத்துவதை முழு அளவில் கைவிட வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் அதிகளவில் மரக்கன்றுகள் வளர்ப்போம். மாசுக்களை குறைப்போம்.- -முத்துராமலிங்க குமார், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர், ஸ்ரீவில்லிபுத்துார்.

மாசுக்களை குறைப்போம்

அதிகரித்து வரும் மக்காத குப்பை எதிர்கால மனித சமுதாயத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. அதிலும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் மண்ணை பாதிப்படைய செய்கிறது. மண்ணைக் காப்பது நம் ஒவ்வொருவரது கடமையாகும். இதற்கு மக்காத குப்பைகள் பயன்படுத்துவதை முழு அளவில் கைவிட வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் அதிகளவில் மரக்கன்றுகள் வளர்ப்போம். மாசுக்களை குறைப்போம்.- -முத்துராமலிங்க குமார், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர், ஸ்ரீவில்லிபுத்துார்.

மாசுக்களை குறைப்போம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ