உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் - புல்லலக்கோட்டை சந்திப்பில் பேரிகார்டுகளால் தொடருது விபத்து

விருதுநகர் - புல்லலக்கோட்டை சந்திப்பில் பேரிகார்டுகளால் தொடருது விபத்து

விருதுநகர், : விருதுநகர் - புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பில் வைக்கும் பேரிகார்டுகளால் வாகனங்கள் விபத்துக்களை சந்தித்து வருகிறது. இதனால் பேரிகார்டுகள் வைப்பதால் இப்பகுதிக்கு தீர்வு இல்லை. பாலம் அமைப்பதே தீர்வாகும்.விருதுநகர் - புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் மிக்க சந்திப்பாகவே மாறி வருகிறது. கலெக்டர் அலுவலக சந்திப்பை போன்று இல்லாமல் இப்பகுதி குறுக்காக ரோடு செல்கிறது.கிராஸ் செய்யும் இந்த பகுதி கலெக்டர் அலுவலக சந்திப்பு கிராஸிங் பகுதியை விட குறுகியதாக உள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றமே பேரிகார்டுகளை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று வரையில் நான்கு வழிச்சாலையில் தீராத தலைவலியாக பேரிகார்டுகள் உள்ளன.தற்போது புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பில் அதிகரித்து வரும் நெரிசலால் குறுக்கே கிராஸ் செய்ய நிற்போரும், நான்கு வழிச்சாலையில் இருந்து வரும் வாகனங்களும் போட்டி போட்டு முந்துகின்றன. ஒரு வாகனங்களை விடாமல் மற்றொரு வழித்தட வாகனங்கள் முந்துவதால் நான்கு வழிச்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பேரிகார்டை தட்டிவிட்டு செல்கின்றன.இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலெக்டர் அலுவலக பாலம் பணிகள் தற்போது வரை துவங்கப்படவில்லை. இந்நிலையில் மோசமான சூழலால் டூவீலர்களில் செல்லும் சாமனிய வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர்.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் பாலங்கள் அமைத்தால் தான் நான்கு வழிச்சாலையில் பேரிகார்டுகள் இல்லாத நிலை உருவாகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை