உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான்கு வழிச்சாலையில் பேரிகேடுகளால் விபத்துக்கள்... சந்திப்புகளில் பாலம் அமைப்பது அவசியம்

நான்கு வழிச்சாலையில் பேரிகேடுகளால் விபத்துக்கள்... சந்திப்புகளில் பாலம் அமைப்பது அவசியம்

விருதுநகர் - மதுரை நான்கு வழிச்சாலையில் சாத்துார் சந்திப்பு, புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு, சூலக்கரை பட்டம் புதுார் கலெக்டர் அலுவலகம், சிவனைந்தபுரம், தோட்டிலோன்பட்டிஆகிய பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக போலீசார் மக்கள் பங்களிப்போடு இரும்பு பேரிகேடுகள் வைத்துள்ளனர்.இந்த சந்திப்புகளில் உள்ளூர் வாகனங்கள் அடிக்கடி நான்கு வழிச்சாலையை கடப்பதாலும் உள்ளூர் மக்கள் நான்கு வழிச்சாலையை நடந்து கடக்கும் போதும் நான்கு வழி சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த அச்சமும் கவலையும் அடைந்தனர். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விபத்துக்கள் நடப்பது அதிகரித்து வந்ததை தொடர்ந்து நான்கு வழிச்சாலை தனியாக போக்குவரத்து பிரிவு ஏற்படுத்தி போலீசாரை நியமித்த அரசு இந்தப் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வந்தனர்.இருந்த போதும் வாகனங்கள் பாதசாரிகள் மீதும் டிராபிக் போலீசார் மீதும் மோதுவது தொடர்ந்ததால் வேறு வழி இன்றி போலீசார் நான்கு வழிச்சாலையில் இரும்பு பேரிக்காடுகள் அமைத்து வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த துவங்கினர். ஆனால் இவ்வாறு அமைக்கப்பட்ட இரும்பு பேரிகேடுகள் விபத்துக்கள் அதிகரிக்க காரணமாக அமைந்து வருகிறது.மிகக் குறைந்த துாரத்தில் பேரிகேடுகள் அமைக்கப்படுவதால் நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து இரும்பு தடுப்பு கம்பிகள் மீது மோதியும் சென்டர் மீடியினில் மோதியும் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு எட்டூர் வட்டம் டோல்கேட்டுக்கு அருகிலும் சிவனைந்தபுரம் போலீஸ் செக் போஸ்ட்க்கு அருகிலும் வாகனங்கள் இரும்பு பேரிகேடுகளில் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.பேரிகேடுகளுக்கு இடையில் புகுந்து வளைந்து கண்டெய்னர் லாரிகள் செல்லும் போது பின்னால் வேகமாக வரும் கார்கள் லாரியின் பின்னால் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. பேரிகேடுகளைப் பார்த்து மெல்ல செல்லும் வாகனங்களின் பின்னால் வேகமாக வரும் வேன்கள் கார்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கிறது. எனவே நான்கு வழிச்சாலையில் உள்ள பேரிகேடுகள் வைக்காமல் விபத்து ஏற்படும் பகுதிகளிலும், முக்கிய சந்திப்புகளில் பாலம் அமைத்து விபத்துக்களை தவிர்க்க வேண்டுமென வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை