உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதி இடமாற்றம்

ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதி இடமாற்றம்

சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசியில் வாடகை வீட்டில் இட நெருக்கடியில் இயங்கி வந்த அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி , மாணவர் விடுதி கட்டடத்திற்கு இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.சிவகாசி சிறுகுளம் கண்மாய் அருகே 2016ல் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது ஆதி திராவிடர் பள்ளி மாணவிகள் விடுதி கட்டடம் இடிக்கப்பட்டது. அதன்பின் மாணவிகள் விடுதி சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு மாற்றப்பட்டு, மாணவர் விடுதி வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த விடுதி 2023 முதல் கல்லுாரி மாணவிகள் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டு, 64 மாணவிகளை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மாணவர் விடுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மாணவிகள் விடுதி வாடகை வீட்டிற்கு மாற்றப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த வாடகை வீட்டில் போதிய இடவசதி இல்லாததால், இட நெருக்கடி காரணமாக மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. மாணவிகளும் கலெக்டரிடம் விடுதியை இடமாற்றம் செய்யக்கோரி மனு அளித்தனர்.இதன் எதிரொலியாக அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியை, மீண்டும் மாணவர் விடுதி கட்டடத்திற்கு இடமாற்றம் செய்ய கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரமேஷ் கூறுகையில், சிவகாசி ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியை, சாட்சியாபுரத்தில் உள்ள மாணவர் விடுதி கட்டடத்திற்கு அக். 10 க்குள் இடமாற்றம் செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மாணவர் விடுதிக்கு வாடகை கட்டடம் பார்த்த உடன், விடுதி இடமாற்றம் செய்யப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ