மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
17 hour(s) ago
சாத்துார்:சாத்துார் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 2024 ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.பிட்டர், கம்மியார், மோட்டார் வண்டி, எலக்ட்ரீசியன், சோலார் டெக்னாலஜி, பையர் டெக்னாலஜி, போன்ற பிரிவுகளிலும் மேலும் தற்சமயம் தமிழகஅரசு டாட்டா கன்சல்டன்சி உடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுபாக்சரிங், டெக்னீசியன் மேனுபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், அட்வான்ஸ்டு சின்சி மெஷினில் டெக்னீசியன் ஆகிய மூன்று தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ், வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது கல்வி சான்றிதழ் மற்றும் ஜாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் விண்ணப்ப கட்டணம் ரூ.50 நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in ஆகும்.மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 750 வழங்கப்படும். இலவச பஸ் பாஸ், இலவச சீருடை மற்றும் அரசு வழங்கும் ஏனைய இலவச பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும். மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளது.ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பம் செய்யலாம் விண்ணப்பம்செய்ய கடைசி தேதி ஜூன் 7. இந்த வாய்ப்பை சாத்துார் சுற்று வட்டாரத்தில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வர் மாரீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
17 hour(s) ago
17 hour(s) ago