உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அ.தி.மு.க., நிர்வாகி கொலை உறவினர் கைது

அ.தி.மு.க., நிர்வாகி கொலை உறவினர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அ.தி.மு.க. கிளைச்செயலாளர் சின்ன குருசாமி 60, அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் மணிகண்டனை 28, போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அச்சம்தவிர்த்தானை சேர்ந்தவர் சின்ன குருசாமி. நேற்று முன்தினம் இரவு அங்குள்ள நூலகத்தின் திண்ணையில் படுத்திருந்த நிலையில் கம்பால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். நேற்றுகாலை அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சம்பவ இடத்தை விருதுநகர் எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா, டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் பார்வையிட்டனர்.வன்னியம்பட்டி போலீசார் விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த கொத்தனராக வேலை பார்க்கும் அவரது உறவினர் மணிகண்டன் , நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தபோது வழியில் அவரை குடும்ப பிரச்னை காரணமாக சின்ன குருசாமி திட்டியதால் கம்பால் அடித்துக்கொலை செய்தது தெரிய வந்தது. மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை