மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
14 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
14 hour(s) ago
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் போலி டாக்டர்கள் மூலம் மருத்துவச் சான்று தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்வதை தடுக்க, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த டாக்டர்கள் மட்டுமே இனி சாரதி மென்பொருளில் மருத்துவச் சான்றிதழை மின்னணு வாயிலாக பதிவேற்றம் செய்ய முடியும்.தகுதி வாய்ந்த டாக்டர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் தங்களின் கிளினிக், மருத்துவமனை ஆகிய அனைத்து விவரங்களையும் ஒரு முறை பதிவேற்றம் செய்து பெயரை ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்.மேலும் சாரதி மென்பொருளில் விவரங்களை உள்ளீடு செய்வது குறித்த செயல்முறை விளக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் இன்று (ஜூன் 11) காலை 11:00 மணிக்கு காண்பிக்கப்படுகிறது. இதில் பங்கேற்று பதிவுகளை இறுதி செய்யும் முறை பற்றி டாக்டர்கள் அறிந்து கொள்ளலாம், என்றார்.
14 hour(s) ago
14 hour(s) ago