மேலும் செய்திகள்
கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு
23-Feb-2025
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 நாள் கருத்தரங்கு நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணை தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். டீன் சிவகுமார் வரவேற்றார். ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளி கொண்ட ராஜசேகரன் வாழ்த்துரையாற்றினார்.கருத்தரங்கில் ஜான்சி ஐகார் ஆராய்ச்சி மைய இயக்குனர் பேராசிரியர் அருணாச்சலம் மாநாட்டு ஆராய்ச்சி மலரை வெளியிட்டு பேசினார். பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர் ஜேசு எட்வர்ட் ஜார்ஜ் நன்றி கூறினார்.
23-Feb-2025