உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அண்ணாதுரை பிறந்தநாள்

அண்ணாதுரை பிறந்தநாள்

விருதுநகர் : மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது சிலைக்கு அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., அ.தி.மு.க., நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமையில் தி.மு.க., வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன், நகரச் செயலாளர் தனபாலன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமையில் நகரச் செயலாளர் வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* சிவகாசியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர தி.மு.க., சார்பில் கட்சியினர் மாலை அணிவித்தனர். * ஸ்ரீவில்லிபுத்துாரில் ம.தி.மு.க., சார்பில் நகர் செயலாளர் முரளி, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் காதர் மைதீன் பங்கேற்றனர்.இதேபோல் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை