உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பழமையான சிலைகள், மண்டபங்களை பராமரிக்க எதிர்பார்ப்பு

பழமையான சிலைகள், மண்டபங்களை பராமரிக்க எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் காணப்படும் பழமையான சிலைகள், மண்டபங்களை பராமரிக்க அவ்வூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகரின் பல்வேறு ஊரக பகுதிகளில் பழங்கால சிலைகள், பாண்டியர் கால வழிபாட்டு முறைகள், கல் மண்டபங்கள் போன்றவை காணப்படுகின்றன. இதை தொல்லியல் ஆய்வில் ஆர்வம் கொண்ட பலரும் நிறுவன அமைப்பாக ஏற்படுத்தி ஆய்வு செய்து அவற்றை பற்றி எடுத்து கூறுகின்றனர். இவற்றில் பெரும்பான்மை வழிபாட்டில் உள்ளன. ஆண்டுக்கொரு முறையாவது குலதெய்வ வழிபாட்டிற்கு இந்த சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு வளாகம் அமைத்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில சிலைகள் ஊரகப்பகுதிகளில் இருப்பதாலும், அவற்றை பற்றி அவ்வூர் மக்களுக்கு பெரிய அளவில் தொல்லியல் அறிவு இல்லாமல் போவதால் அவை அப்படியே விடப்படுகின்றன.இவை மண்ணில் புதைந்து பாழடைந்து வருகின்றன. இதே போல் பழமை வாய்ந்த கல் மண்டபங்களும் நாளடைவில் சேதம் அடைந்து வருகின்றன. எவ்வித பராமரிப்பும் இல்லை. மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் கல் மண்டபங்களில் மது குடித்து விட்டு பாட்டில்களை உடைக்கின்றனர். ஊரகப்பகுதிகளில் காணப்படும் இது போன்ற சிறிய சிறிய சிலைகள், அதன் வரலாறு, கல் மண்டபங்களை ஏன் மன்னர்கள் அமைத்தனர் போன்றவற்றை இவற்றின் அருகில் தகவல் பலகை வைத்தால் மக்கள் தெரிந்து கொள்வர். அந்தந்த ஊரிலே இந்த சிலைகள் இருப்பது பெருமை. அதன் பழமை என்ன என்பதை உணர்த்த வேண்டியது மாவட்ட தொல்லியல் துறை கடமை. மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் எடுத்து ஊரகப்பகுதிகளில் பராமரிப்பின்றி கிடக்கும் பழங்கால சிலைகள், மண்டபங்கள் அருகே தகவல் பலகை வைத்து மாதம் ஒரு முறை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி