உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நில அளவீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

நில அளவீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நில அளவீட்டிற்கு அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி 2023 நவ. 20ல் துவங்கியது. இதன் மூலம் நில அளவை செய்ய எந்த நேரத்திலும், எங்கிருந்தும் நில அளவை கட்டணம் உள்பட கட்டணங்களை இணைய வழியில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.நில அளவை செய்யும் தேதி மனுதாரரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அளவை செய்த பின் மனுதாரர், நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை https://eservices.tn.gov.inஎன்ற இணைய தளம் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த இணையதளம், 'தமிழ் நிலம்' செயலி மூலம் நில அளவை தொடர்பான விவரங்களை பார்வையிட்டு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ