எம்.எல்.ஏ.,வுடன் வாக்குவாதம்
விருதுநகர் : விருதுநகரில் குடிநீர் தொட்டியை திறக்க வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசனை, அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் தலைமையில் மக்கள் முற்றுகையிட்டனர்.விருதுநகர் அருகே பெரிய பேராலியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள குடிநீர் தொட்டியை தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசன் திறக்க வந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலருமான மச்சராஜா தலைமையில் எம்.எல்.ஏ., நிதியில் இருந்தோ, மாநில அரசு நிதியில் இருந்தோ தற்போதுவரை ரோடு அமைத்து தரவில்லை. எந்த ஒரு பணியும் செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். இதையடுத்து எம்.எல்ஏ., சீனிவாசன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.