உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு தாலுகாவில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிர் சாகுபடி நடந்து வரும் நிலையில் தற்போது வெப்பநிலை அதிகரிப்பால் தென்னைகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, நேர்முக உதவியாளர் நாச்சியார், வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன், பாலாஜி ஆகியோர் நேரடி ஆய்வு மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை தோட்டக்கலை அலுவலர்கள் சங்கீதா, ராம் பிரகாஷ், அருண் பாண்டியன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ