உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

திருச்சுழி : திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., திட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். பவுண்டேஷன் நிர்வாகி பொன்ராம் முன்னிலை வகித்தார்.முகாமில் பிளாஸ்டிக் ஒழிப்பு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், மரம் வளர்ப்பின் பயன்கள் குறித்து மாணவருக்கு எடுத்துக் கூறப்பட்டது. பள்ளி வளாகத்தில் மருதம், மகிழம், அரசமரம் மற்றும் பல்வேறு நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது. என்.எஸ். எஸ்., திட்ட அலுவலர் செல்வராஜ், பசுமை படை ஆசிரியர் முத்துக்கருப்பன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி