உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டியில் கோடை மழைக்கு சாய்ந்த வாழை மரங்கள்

காரியாபட்டியில் கோடை மழைக்கு சாய்ந்த வாழை மரங்கள்

காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் திடீரென பெய்த கோடை மழைக்கு வீசிய பலத்த காற்றால் வாழை மரங்கள் சாய்ந்தன. ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.காரியாபட்டி பகுதியில் கடுமையான வெயில் தாக்கம் உள்ளது. மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை.அக்னி நட்சத்திர வெயிலால் மக்கள் படாத பாடுபடுகின்றனர். வெப்ப காற்றுக்கு சிறிது நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை லேசான குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.இதையடுத்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காரியாபட்டியை சுற்றி உள்ள கிராமங்களுக்கு ஓரளவிற்கு இடியுடன் கூடிய மழை பெய்தது. எஸ்.மறைக்குளம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.நல்ல விளைச்சல் தரும் நேரத்தில் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நரிக்குடி சொட்டமுறி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை மக்கள் பாத்திரங்களில் சேகரித்தனர். குளிர்ந்த சீதோஷன நிலை காணப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ