உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / *ரோட்டில் திரியும் ஆதரவற்ற மனநலம் பாதித்தோர். *; இருப்பிடமாக மூடிய கடை , நிழற் குடைகள்

*ரோட்டில் திரியும் ஆதரவற்ற மனநலம் பாதித்தோர். *; இருப்பிடமாக மூடிய கடை , நிழற் குடைகள்

ராஜபாளையம்: ஆதரவற்ற மனநலம் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் ரோட்டில் கேட்பாரற்று திரிவதும், கடை தாழ்வாரம் நிழற் குடைகளை தஞ்சமாக மாற்றி வசிப்பதும் அதிகரித்து வருவதை காப்பகத்தில் சேர்த்து பாதுகாக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலாதலமான திருச்சுழி, இருக்கன்குடி, ஸ்ரீவில்லிபுத்துார், சதுரகிரி கோயில்களுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் வரும் போது தங்களுடன் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கோயில்களில் விட்டு சென்று விடுகின்றனர். இதோ குடும்பத்தாரால் கைவிடப்பட்ட மனநலம் பாதித்தோர், முதியோர் ஏராளமானோர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுற்றி திரிந்து வருகின்றனர். அடுத்த வேலை உணவுக்கு உத்தரவாதம் ஏதும் இல்லாத நிலையில் சாலையில் செல்வோரிடம் கையேந்தி பசியை போக்குவதும், மனநலம் பாதிப்பு அதிகரிக்கும் நேரங்களில் ஆடைகள் கிழிந்து அங்கும் இங்கும் கடந்து செல்வதும் என வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.செய்வது அறியாமல் பிதற்றியும், அழுக்கு மூட்டைகளை சுமந்து திரிவது, கைகளில் கம்பை எடுத்துக்கொண்டு வாகனங்களையும் ஆட்களையும் விரட்டுவது, குப்பை மேட்டில் உணவு தேடுவது என பல வகையில் உள்ளனர். இவற்றில் மனநலம் பாதித்த பெண்களும் அடக்கம். இவர்களுடன் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியோர் என ஒரு பிரிவினரும் தங்கள் பங்குக்கு மழை வெயில் என போக்கிடம் இன்றி உள்ளனர். இவர்கள் பஸ் ஸ்டாண்டுகள், கோயில்கள் ஆட்கள் புழக்கம் அதிகம் உள்ள கடைகளில் முன்பு கையேந்தி நிற்பதும் இரவு நேரங்களில் நிழற்குடைகள், மூடிய கடைகள் முன்பு இருப்பிடமாக மாற்றியுள்ளனர்.ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை, டி.பி மில்ஸ் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, சத்திரப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல் 10ற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர், மனநல பாதிப்பிற்கு உள்ளானோர் தொடர்ச்சியாக சிலர் கொண்டு வந்து தரும் உணவினை நம்பி சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வருவதால் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சமூக விரோதிகள் சிலர் இவர்களிடம் தவறான செயல்களில் ஈடுபடுவது என வெளியே தெரியாத குற்றங்களும் நடக்கின்றன.அரசு தற்போது அறிவித்துள்ள மனநல திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் துறை, போலீஸ், நகராட்சி இணைந்து மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ கவனிப்பு மறுவாழ்வு உள்ளிட்ட சாத்தியக்கூறுகளையும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்து பாதுகாப்பையும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை