உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குத்துச்சண்டை போட்டி

குத்துச்சண்டை போட்டி

விருதுநகர்: விருதுநகர் ஹாஜி சிக்கந்தர் ஹவ்வா பீவி நடுநிலைப்பள்ளியில் விருதுநகர் மை ட்ரீம் பாக்சிங் கிளப், சாரா தங்க மாளிகை சார்பில் இரண்டு நாட்கள் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியை உபயோகிப்பாளர் உரிமை கமிட்டி மாவட்டத் தலைவர் முஹம்மது எகியா தலைமை வகித்து துவங்கி வைத்தார்.இந்த போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 வயது முதல் 32 வயதுக்குட்பட்ட 215 பேர் பங்கேற்றனர். போட்டியின் முடிவில் ஓவர் ஆல் டிராபி பெற்று முதல் இடத்தை சென்னை நாராயணன் பாக்ஸிங் அகாடமி, இரண்டாம் இடத்தை மயிலாடுதுறை கிங் பாக்ஸிங் கிளப், மூன்றாம் இடத்தை விருதுநகர் மை ட்ரீம் பாக்சிங் கிளப் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சாரா தங்க மாளிகை நிர்வாகி முகமது அபு குரைய்ரா, சப்தகிரி அவார்டு நிர்வாகிகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ