மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
8 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
8 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர், : கோடை விடுமுறை துவங்கி உள்ள சூழலில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாச சுற்றுலா தலங்களுக்கு நேரடி பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக நிர்வாகம் முன் வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.விவசாயம், பட்டாசு, அச்சு தொழில் என பல லட்சம் தொழிலாளர்கள் வசிக்கும் விருதுநகர் மாவட்டத்தில், சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லை.வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. அங்கு மக்கள் செல்வதற்கும் பல மாதங்களாக அனுமதிக்கப்படவில்லை.ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பிற்கு செல்ல வேண்டுமெனில் அங்கு வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா தலங்கள் என சொல்லிக் கொள்ளும் இடங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.இதனால் மாவட்டத்திற்குள் மக்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல இடமின்றி குற்றாலம், பாபநாசம், திருச்செந்தூர் போன்ற நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ள சூழலில் இத்தகைய ஏழை, எளிய தொழிலாளர்கள் குறைந்த கட்டணத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாச சுற்றுலா நகரங்களுக்கு சென்று வர ஆசைப்படுகின்றனர்.ஆனால், நேரடி பஸ் வசதி இல்லாததாலும், வாடகை கார் வேன் பிடித்து செல்வதற்குரிய பொருளாதார வசதி இல்லாமலும் தங்கள் பயணத்தை கைவிட்டு விடுகின்றனர்.இந்நிலையில் தற்போது ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் பஸ்களை ஊட்டிக்கும், ராஜபாளையம், சிவகாசியில் இருந்து சேலத்திற்கு இயக்கப்படும் பஸ்களை ஏற்காட்டிற்கும் தட நீட்டிப்பு செய்யவும், கொடைக்கானலுக்கு காலை 8:00 மணிக்கு சென்றடைந்து, மீண்டும் அங்கிருந்து இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு திரும்பும் வகையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை டிப்போக்களில் இருந்து நேரடி பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago