உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேவதானம் கோயிலில் தேரோட்டம்

தேவதானம் கோயிலில் தேரோட்டம்

சேத்துார் : ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளாமானோர் பங்கேற்றனர்.ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாதன் சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே.13ல் கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சுவாமி, அம்பாள் பிரியாவிடை உடன் ரிஷப வாகனம், பூப்பல்லக்கு, பூத வாகனம், சிம்ம வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் திருக்கல்யாணத்தை தொடர்ந்து நேற்று மதியம் தேரோட்டம் நடந்தது.தளவாய்புரம், சேத்துார், முகவூர், ராஜபாளையம், கோவிலுார் உள்ளிட்ட 10கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி அம்மன் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் சென்ற பகுதிகளில் பக்தர்கள் விழுந்து 'கும்பிடு சாமி' எனும் அங்க பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை