உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செவல் கண்மாய் துார்வாரும் பணிகள் தீவிரம்

செவல் கண்மாய் துார்வாரும் பணிகள் தீவிரம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை செவல் கண்மாயில் துார்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விவசாயிகள் மழைநீர் வரத்து கால்வாய்களையும் சரி செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் செவல் கண்மாய் நகராட்சி 1, 2, 3, 4 வார்டுகள் வழியாகசெல்கிறது. முன்பு, நகராட்சி மூலம் குடிநீருக்காக கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. நாளடைவில் கண்மாயை பராமரிக்காமல் விட்டதால்ஆகாய தாமரைகள் சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும் அந்தப் பகுதியிலுள்ள வீடுகளின் கழிவுநீர் கண்மாயில் விடப்படும் சுகாதார கேடாக மாறியது. நகராட்சி குப்பையும் கண்மாயில் தான் கொட்டப்பட்டன. கண்மாயை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் கண் மாயை தூர்வார முடிவு செய்து நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கண்மாயில் உள்ள ஆகாய தாமரைகள் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பின்னர் கண்மாய் கரை பலப்படுத்தப்பட்டு அதன் மேல் நடை பாதை மேடை அமைக்கப்பட உள்ளது. இத்துடன் கண்மாய்க்கு மழை நீர் வரத்து ஓடைகளையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ