சிவகாசியில் நீர்வழிப்பாதைகளில் முட்செடிகள் அகற்றம்
சிவகாசி: நெடுஞ்சாலைத்துறை சார்ப்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ரோடுகள் மற்றும் பாலங்கள் பராமரிப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளின் மூலம் பாலங்களில் உள்ள நீர்வழிப்பாதையில் மழைநீர் எளிதாக செல்லும் பொருட்டு, முட்புதர்கள் அகற்றும் பணிகள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விருதுநகர் கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பாக்கியலட்சுமி தலைமையில் சிவகாசி பகுதியில் உள்ள ரோடுகள், பாலங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு கனமழையால், சிதிலமடைந்த ரோடுகள் மற்றும் பாலங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. உதவிக் கோட்டப் பொறியாளர் காளிதாசன், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் சாலைப் பணியாளர்கள் சிவகாசி நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ள ரோடுகள் மற்றும் பாலங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நீர்வழிப் பாதைகளில் உள்ள செடிகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.