| ADDED : மே 07, 2024 04:58 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள், தமிழன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கம், இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கம், பட்டாசு கடை விற்பனையாளர் சங்கம், வெடி பொருள் விற்பனையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் தலைவர், உறுப்பினர்கள், பட்டாசு ரசாயன பொருட்கள் விற்பனையாளர்களுடன் விருதுநகர் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் விழிப்புணர்வு, கலந்தாய்வு கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் உரிமத்தில் குறிப்பிடட் பட்டாசுகளை தவிர வேறு பட்டாசுக்களை உற்பத்தி செய்யக்கூடாது. பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள மரத்தடியில் பட்டாசுக்களை தயாரிக்கக்கூடாது. மக்களிடையே திரி தயாரிக்க கொடுத்து வாங்குதல் உள்பட பலவும் குறித்து விவாதிக்கப்பட்டது.