உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூட்டுறவு சங்கத்தில் ஊழல்; விவசாயிகள் சங்கம் முறையீடு

கூட்டுறவு சங்கத்தில் ஊழல்; விவசாயிகள் சங்கம் முறையீடு

விருதுநகர் : விருதுநகர் அருகே வள்ளியூர் குமாரலிங்கபுரம் கூட்டுறவு சங்கத்தில் ஊழல் நடந்துள்ளதாக தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, இணைப்பதிவாளர் செந்தில்குமாரிடம் அளித்த மனு: வள்ளியூர் குமாரலிங்கபுரத்தில் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் இவர்கள் வரவு, செலவு வைத்துள்ளனர். 6 மாதமாக விவசாயிகள் நகைக்கடன், சேமிப்பு கணக்கு எடுக்க சென்றால் இல்லை என்கின்றனர்.கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்த ஊழலை விசாரித்து நடவடிக்கை எடுக்க மனு அளித்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிவகாசி ரோட்டில் மறியலில் ஈடுபடுவோம், என தெரிவித்தார்.இந்நிலையில் மனு மீது நீண்ட நாட்களாக நடவடிக்கை இல்லாததால் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட வந்த விவசாயிகளிடம் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை