மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
16 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
16 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிறப்பு கடன் மேளா இன்று நடக்கிறது என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 38 கிளைகளிலும் அனைத்து தரப்பு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வீட்டு வசதி ககடன், அடமான கடன், பண்ணை சாரா கடன், மத்திய கால விவசாய கடன், சம்பளக்கடன், பணிபரியும் மகளிர் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், சிறு வணிக கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ கடன்கள், வாகன கடன் ஆகியவை மிக குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. இன்று சிறப்பு மேளா காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து தகுதியின் அடிப்படையில் கடன் பெற்று கொள்ளலாம். விவரங்களுக்கு 94899 27009, 94899 27006 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.
16 hour(s) ago
16 hour(s) ago