மேலும் செய்திகள்
குல்லுார் சந்தை அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்
20 hour(s) ago
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
20 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
20 hour(s) ago
சிவகாசி: திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியில் வாறுகால் , ரோடு சேதம் அடைந்து இருப்பதால் குடியிருப்பு வாசிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ரோடு வாறுகாலை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது.ஆனால் இதுவரையில் சீரமைக்கப்படவில்லை. தற்போது ரோடு முழுவதுமே குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. மழைக்காலங்களில் தண்ணீர்தேங்குவதால் குடியிருப்புவாசிகள் நடமாடுவதற்கே சிரமப்படுகின்றனர்.மேலும் இதில் டூவீலர் உட்பட எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. தட்டு தடுமாறி வரும் டூவீலரும் விபத்தில் சிக்குகிறது. குழந்தைகள், பெரியவர்கள் உள்பட அனைவருமே அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். தவிர வாறுகாலும் சேதம் அடைந்திருப்பதால் கழிவுநீர் வெளியேற வழி இல்லை.இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே முனீஸ்வரன் காலனியில் சேதம் அடைந்த வாறுகால், ரோட்டினை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago