மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
45 minutes ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
46 minutes ago
சிவகாசி, : சிவகாசி அருகே மாரனேரியிலிருந்து இ.டி.ரெட்டியபட்டி செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் 3 கிராம மக்கள் கூடுதலாக 10 கி.மீ., சுற்றி வெம்பக்கோட்டை, சாத்துார் செல்ல வேண்டியுள்ளது. சிவகாசி அருகே மாரனேரியிலிருந்து இ.டி. ரெட்டியபட்டி 5 கி.மீ. துாரத்தில் உள்ளது. இந்த ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது முற்றிலும் சிதைந்து போக்குவரத்திற்கு பயனற்று உள்ளது. வேறு வழியின்றி இந்த ரோட்டில் வருகின்ற வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றது. மாரனேரி, விளாம்பட்டி, சிங்கம்பட்டி பகுதி மக்கள் தாயில்பட்டி, சாத்துார், வெம்பக்கோட்டை செல்வதற்கு இ.டி ரெட்டியபட்டி வழியாக செல்வர். ஆனால் ரோடு சேதத்தால் இப்பகுதியினர் சிவகாசி வந்து மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் கூடுதலாக 10 கி.மீ. அலைகின்றனர். இதனால் நேரம் விரயமாவதுடன், பணமும் அதிகமாக செலவாகிறது. மேலும் இதே ரோட்டில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு வரும் வாகனங்களும் பெரிதும் சிரமப்படுகின்றது. மழைக்காலங்களில் ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு ரோடு மோசமாகி விடுகின்றது. எனவே மாரனேரியில்இருந்து இ.டி.ரெட்டியபட்டி செல்லும் ரோட்டினை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
45 minutes ago
46 minutes ago