உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மதுரை ரோட்டில் மரண குழிகள் ஸ்ரீவி., மக்கள் குமுறல்

மதுரை ரோட்டில் மரண குழிகள் ஸ்ரீவி., மக்கள் குமுறல்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி விலக்கில் இருந்து இருந்து கிருஷ்ணன் கோவில் வரையுள்ள மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் ரோடுகள் சேதமடைந்து குண்டும், குழியுமாகி இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் பயணித்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ரோடு படிப்படியாக சேதமடைந்து தற்போது பல இடங்களில் மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு குழிகள் விழுந்து காணப்படுகிறது. மேலும் ரோட்டில் இருபுறமும் மணல் குவியல்கள் காணப்படுகிறது.இதனால் இந்த வழித்தடத்தில் தினமும் பயணிக்கும் டூவீலர் வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் காயமடைந்தும் உள்ளனர். இந்த ரோட்டின் வழியாக அடிக்கடி கலெக்டர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள் பயணித்து வரும் நிலையில், ரோட்டை உடனடியாக சீரமைப்பதில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். சமீபத்தில் ராஜபாளையத்தில் டூவீலரில் சென்ற பெண் ஒருவர் பலியானார். உயிர்ப்பலி ஏற்பட்ட பிறகும் இந்த ரோட்டினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ