உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

காரியாபட்டி: காரியாபட்டியில் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டிருந்த நுங்கு கழிவுகளை தினமலர் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தினர்.காரியாபட்டியில் திருச்சுழி ரோட்டோரத்தில் நுங்கு கழிவுகளை கொட்டியிருந்தனர். ஆட்கள் கூட நடந்து செல்ல முடியாத அளவிற்கு குப்பை மேடாக கிடந்தன. டூவீலரில் வருபவர்கள், வாகன ஓட்டிகள் என பலரும் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு இருந்தது.இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள் தட்டு தடுமாறி சென்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ