உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இரு நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படும்

இரு நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படும்

அருப்புக்கோட்டை : ''நகராட்சி மூலம் அருப்புக்கோட்டையில் வாரத்தில் 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. பணிகள் முற்றிலும் முடிவடைந்த உடன் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படும்.,'' என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார். அருப்புக்கோட்டை அன்பு நகர் புளியம்பட்டி பகுதியில் ரேஷன் கடை, அன்பு நகர், நெசவாளர் காலனி, பாரதிதாசன் தெரு, அண்ணா நகர் பகுதிகளில் சமுதாய கழிப்பறைகள் திறந்தும், எம்.டி.ஆர்., நகரில் அங்கன்வாடி கட்டும் பணி உட்பட நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: நகராட்சி மூலம் அருப்புக்கோட்டையில் வாரத்தில் 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. பணிகள் முற்றிலும் முடிவடைந்த உடன் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படும். நீங்கள் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று பேசினார். உடன், நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, துணை தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜமாணிக்கம், முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், கவுன்சிலர்கள் தனலட்சுமி, ஜோதிராமலிங்கம், நாகநாதன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை