உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தோண்டியும் பணி துவங்காததால் சிக்கல்; சுகாதாரக் கேட்டுடன் மக்கள் சிரமம்

தோண்டியும் பணி துவங்காததால் சிக்கல்; சுகாதாரக் கேட்டுடன் மக்கள் சிரமம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் அருகே சாக்கடை தரைப்பாலத்திற்காக தோண்டி பணிகளை தொடங்காததால் சுகாதார கேட்டுடன் அப்பகுதியை கடக்க மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ராஜபாளையம் நகராட்சி 22 வார்டு பகுதியில் உள்ளது முத்து கொத்தனார் தெரு.இங்குள்ள சாக்கடை தரைப்பாலம் புதிதாக அமைக்க 20 நாட்களுக்கு முன் தோண்டி போட்டு பணிகளை கிடப்பில் விட்டுள்ளனர்.இதனால் தோண்டப்பட்ட பகுதியிலிருந்து சாக்கடை தேக்கம், துர்நாற்றம் உள்ளிட்ட சிக்கலுடன் இப்பகுதியில் டூ வீலர் உள்ளிட்ட வாகனங்களும் முதியோர் குழந்தைகள் கடந்து செல்லவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு காரணமாக தரை பாலத்தின் கடைசி பகுதியில் குடிநீர் தொட்டியின் மின் இணைப்பு பெட்டி அமைந்துள்ளதன் இணைப்பை மின்வாரியத்தினர் துண்டிக்க கால தாமதம் ஏற்படுவதை காரணமாக கூறுகின்றனர்.பணிகளை தொடங்கும் முன்பே இது குறித்து ஒருங்கிணைப்பு மற்றும் முன்னெடுப்பு நடவடிக்கையுடன் செயல்பட்டால் மக்களுக்கான சிரமத்தை தவிர்த்து இருக்கலாம் என்பதே இப்பகுதியினரின் எதிர்பார்ப்பு. இது குறித்து தங்கராஜ்: அங்கைய ராஜா தெரு, பூபதி ராஜா பேங்க் தெரு, அம்பலப்புலி பஜார், முத்து கொத்தனார் தெரு என நான்கு பகுதிகளுக்கும் இணைப்பாக உள்ள இந்த தரைப்பால பாதை முடக்கத்தால் இப்பகுதியை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தோண்டி போட்டுள்ளதால் கழிவு நீரும் அடைத்து தேங்கி குடியிருப்பு வாசிகள் சங்கடத்திற்கு உள்ளாகிறோம்.நீண்ட தாமதத்திற்கு பின் தொடங்கியுள்ள பணிகளை ஒப்பந்ததாரர்கள் துறை ரீதியாக முறையான திட்டமிடலுடன் நடக்காததால் சிரமத்திற்கு உள்ளாகிறோம். விரைவில் பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை