உள்ளூர் செய்திகள்

கல்வி மலர் கட்டுரை

ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தலைவர் கே.ராஜீ கூறியதாவது: சாத்துார் மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை , அறிவியல் கல்லுாரி 2014ல் துவங்கப்பட்டது. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது, 14 இளங்கலை 5முதுகலை படிப்புகள் உள்ளன.நடப்பு கல்வி ஆண்டில் மாவட்டத்திலே முதல் முறையாக பி.ஏ., குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகவியல், பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.தடயவியல், செயற்கை நுண்ணறிவு, உடற்கல்வி,ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் அறிவியல், வரலாறு, பி.காம். பட்டப்படிப்புகளும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தடயவியல், படிப்புகளுக்கான ஆய்வகங்கள், பெண்களுக்கான தனி விடுதி வசதிகள், 25,000 மேற்பட்ட நுால்களுடன் கூடிய நுாலக வசதி, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளும் உள்ளது.ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்வி குழுமம் அறக்கட்டளை பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், ஒரு பெற்றோர் மட்டும் உள்ள மாணவர்களுக்கும் கல்லுாரி கட்டணத்தில் 75 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படுகிறது. கல்லுாரியில் வளாக நேர்முகத் தேர்வுகள் மூலம் பல்வேறு நிறுவனங்களில் 98 சதவீதம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி