உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டில் நடுவே மின்கம்பம் மக்கள் அவதி

ரோட்டில் நடுவே மின்கம்பம் மக்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் விழுப்பனுார் ஊராட்சியை சேர்ந்தது முத்துநகர் இங்குள்ள முதல் தெரு வழியாகத்தான் அப்பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் செல்ல வேண்டும்.20 அடி அகலம் உள்ள இந்த ரோட்டின் மையப்பகுதியில் மின் கம்பங்கள் ஊன்றபட்டுள்ளதால் ஆட்டோ, டிராக்டர், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள், விவசாயத்திற்கு உரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.இந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரியம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தினமும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை