மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
19 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
19 hour(s) ago
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பஸ் ஸ்டாண்ட், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர் நாய்களை கரடி விரட்டிச் செல்வதை பார்த்துள்ளனர்.கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரவில் குடியிருப்பு பகுதியில் கரடி சுற்றித்திரிந்தது தெரிந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிந்ததும், தளவாய்புரம் பகுதிகளில் ஆய்வு செய்தனர். புத்துார் மெயின் ரோடு பகுதிகளில் கரடியின் கால் தடம் தெரிந்ததை அடுத்து, வனத்துறையினர் புத்துார் கண்மாய் பகுதி புதர்களிடையே கரடி பதுங்கி இருக்கலாம் என, கூண்டுடன் தேடி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் கரடி உலா வரும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
19 hour(s) ago
19 hour(s) ago